பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர்கள் - போக்சோவில் கைது
மாணவியை காதலிக்க வற்புறுத்திய 3 வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டு உள்ளனர்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை சோ்ந்த மாணவி அதே பகுதியிலுள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். இந்த மாணவியிடம்
உச்சிப்புளியை சேர்ந்த கலைக்குமாா் (19), முகேஷ் (21), அஜய் (19) ஆகிய 3 பேரும் காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்துவந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று மாணவியின் வீட்டில் பெற்றோா் இல்லாத நேரத்தில் உள்ளே புகுந்து அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனா்.
அதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டு உள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியினர் மாணவியிடம் தகராறு செய்த 3 பேரையும் பிடித்து உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் மாணவியை காதலிக்க வற்புறுத்தி 3 வாலிபர்கள் மீது போச்சோவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story