திருமணமான அன்றே காதல் கணவன் ஓட்டம்; மனைவி தர்ணா
திருமணமான அன்றே ஓடிய காதல் கணவனை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி தர்ணாவில் ஈடுபட்டு உள்ளார்
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த மெய்யூர் கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரது மகள் லட்சுமி( 23). டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளார். லட்சமி வீட்டு அருகில் உள்ள சின்னராசு என்ற இளைஞரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி லட்சுமியுடன் சின்னராசு உல்லாசமாக இருந்துள்ளார். இதனால், லட்சுமி கர்பமாகியுள்ளார். ஆனால், திருமணம் செய்துகொள்வதால் தற்போது கருவை கலைத்துவிடும்படி சின்னராசு லட்சுமியுடன் கூறியுள்ளார். இதனை நம்பி லட்சுமியும் கருக்கலைப்பு செய்துள்ளார்.
இந்நிலையில் சின்னராசு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயற்சி எடுத்திருப்பதாக இளம்பெண் லட்சுமி ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
போலீஸ் விசாரணையின் போது லட்சுமியை திருமணம் செய்வதாக ஒப்புக்கொண்ட சின்னராசு ஜனவரி மாதம் இருதரப்பு உறவினர்கள் ஒரு சிலர் முன்னிலையில் தாலி கட்டியுள்ளார்.
அதனையடுத்து, திருமணமான அன்றே இளம்பெண் லஷ்மியை இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு வந்து பஜாரில் இறக்கி விட்டு சின்னராசு தலைமறைவானதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசாரிடம் புகார் கொடுத்தும் இதுவரை காதலித்து ஏமாற்றிய சின்ன ராசாவை கைது செய்யாமல் இருப்பதால் ஆத்திரம் அடைந்த இளம் தன் காதலன் சின்னராசு வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். '
Related Tags :
Next Story