2 குழந்தைகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை


2 குழந்தைகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 18 Feb 2022 4:57 PM IST (Updated: 18 Feb 2022 4:57 PM IST)
t-max-icont-min-icon

இரண்டு குழந்தைகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது

கடலூர் 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த வினோத். என்பவர் மனைவி சசிகலா(வயது 30). இவர்களுக்கு வரோகா(3)  3 மாத குழந்தை விஜயஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தனர். 

இரண்டாவது குழந்தை பிறந்ததில் இருந்து சசிகலா உடல் நிலை சிரியில்லாமல் இருந்து வந்தார். பின்னர் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் வைத்து கவனித்தனர். இருப்பினும் அவருக்கு நோய் குணமடையவில்லை.

இதனால் சசிகலா தற்கொலை செய்யும் முடிவுவை எடுத்து உள்ளார். ஆனால் தான் இறந்த பிறகு குழந்தைகள் அனாதையாக ஆகிவிடும் என்பதால் முதலில் குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்

இதற்காக கடந்த 2018-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த சசிகலா தனது இரண்டு குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்று உள்ளார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சசிகலாவை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்து.  தற்போது இந்த வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார்.  அதில் கொடூரமான முறையில் 2 குழந்தைகளை கொலை செய்த சசிகலாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். 


Next Story