இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ராமேசுவரம் மீனவர்கள் 37 பேர் தமிழகம் வருகை


இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ராமேசுவரம் மீனவர்கள் 37 பேர் தமிழகம் வருகை
x
தினத்தந்தி 18 Feb 2022 11:15 PM IST (Updated: 18 Feb 2022 11:15 PM IST)
t-max-icont-min-icon

ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்கச் சென்ற 6 விசைப்படகுகள் மற்றும் 56 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

ராமேசுவரம், 

ராமசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்கச் சென்ற 6 விசைப்படகுகள் மற்றும் 56 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட 56 மீனவர்களும் கடந்த மாதம் 25 -ந் தேதி விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் 9 மீனவர்கள் மட்டும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட்டனர். மீதம் உள்ள மீனவர்கள் இலங்கை தலைநகர் கொழும்புவில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் கொழும்புவில் இருந்து, 47 மீனவர்களும் நேற்று விமானம் மூலம் புறப்பட்டு காலை 7 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்திறங்கினர். அங்கிருந்து ராமேசுவரம் மீனவர்கள் 37 பேரும், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் சேர்ந்த மீனவர்கள் 10 பேரும் மீன்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இலங்கை சிறையில் இன்னும் நாகை மற்றும் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 44 மீனவர்கள் அடைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story