வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 19 Feb 2022 10:13 AM IST (Updated: 19 Feb 2022 1:02 PM IST)
t-max-icont-min-icon

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவர் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தார்.

வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், கோவையில் தோல்விக்கான காரணத்தை மூடிமறைக்க அதிமுக நாடமாடி உள்ளதாக குற்றம்சாட்டினார்.

நேற்று கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி கைது செய்யப்பட்டதை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பேசியதாவது, “ராணுவம் வரும் அளவுக்கு கோவையில் எந்த சம்பவமும் நடைபெறவில்லை. கோவையில் தோல்விக்கான காரணத்தை மூடிமறைக்க அதிமுக நாடமாடி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்” என்று கூறினார்.


Next Story