வாக்குச்சாவடிக்குள் பெண் ஹிஜாபை அகற்றச் சொன்ன பூத் ஏஜெண்ட் வெளியேற்றம்


வாக்குச்சாவடிக்குள் பெண் ஹிஜாபை அகற்றச் சொன்ன பூத் ஏஜெண்ட் வெளியேற்றம்
x
தினத்தந்தி 19 Feb 2022 11:28 AM IST (Updated: 19 Feb 2022 11:28 AM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த பெண் ஹிஜாபை அகற்றச் சொல்லியதால் பூத் ஏஜெண்ட் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மேலூர்: 

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி தேர்தலில் 8வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்கு சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண்ணின் ஹிஜாப்பை அகற்ற சொல்லி பாஜக கட்சியின் பூத் ஏஜெண்ட் கிரிராஜன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

பெண் வாக்களிடம் பாஜக பூத் ஏஜெண்ட் ஹிஜாப்பை அகற்றச்சொன்னதால் திமுக, அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சி ஏஜெண்ட்கள் மற்றும் அதிகாரிகள் வாக்குபதிவு மையத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். 

சிறிதுநேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜன் வாக்குப்பதிவு மையத்திலிருந்து அப்புறபடுத்தியதை அடுத்து வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. அங்கு போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story