மூதாட்டி கையில் மை வைத்துவிட்டு வாக்களிக்க அனுமதி மறுப்பு - வாக்குச்சாவடியில் பரபரப்பு
வாக்குப்பதிவு செய்யாத மூதாட்டின் விரலில் மை வைக்கப்பட்டதால் வாக்கு சாவடியில் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
பெண்ணாடம்,
கடலூர் மாவட்டம் பெண்ணாடகத்தின் 15-வது வார்டு நகர்ப்புற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்று வருகின்றது.
இந்த வாக்கு மையத்துக்கு அதே பகுதியை சேர்ந்த பொன்னம்மாள்(79) என்பவர் வாக்களிக்க வந்துள்ளார். அப்போது பொன்னம்மாள் கையில் மை மட்டும் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை வாக்குச்சாவடியில் இருந்த முகவரிடம் மூதாட்டி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
பின்னர் பொன்னம்மாளை வாக்கு பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடரந்து மூதாட்டி பொன்னம்மாளை வாக்கு பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகள் அனுமதித்தனர்.
இந்த குழப்பத்தால் அந்த வாக்கு சாவடியில் சிறிது நேரம் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story