மத்திய அமைச்சர் எல்.முருகனின் வாக்கை யாரும் போடவில்லை: தேர்தல் ஆணையம்


மத்திய அமைச்சர் எல்.முருகனின் வாக்கை யாரும் போடவில்லை: தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 19 Feb 2022 4:53 PM IST (Updated: 19 Feb 2022 5:38 PM IST)
t-max-icont-min-icon

சென்னை, அண்ணாநகர் வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் எல்.முருகனின் ஓட்டை வேறு ஒருவர் செலுத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

சென்னை,

சென்னை, அண்ணாநகர் வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் எல்.முருகனின் ஓட்டை வேறு ஒருவர் செலுத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். 

அண்ணாமலை தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் ,  மத்திய அமைச்சர் எல். முருகனின்  வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டது.   மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா?” எனக் கேள்வி எழுப்பினார். 

இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள மாநில தேர்தல் ஆணையம்,  மத்திய அமைச்சர் எல். முருகனின் வாக்கை வேறு யாரும் போடவில்லை. அவர் வந்து வாக்களிக்கலாம்.  சம்மந்தப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் இரண்டு முருகன் பெயர் உள்ளது. அதில் ஒன்றுதான் பதிவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளது. 


Next Story