சென்னை மாநகராட்சி தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 41.68 சதவீதம் வாக்குகள் பதிவு


சென்னை மாநகராட்சி தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 41.68 சதவீதம் வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 19 Feb 2022 7:32 PM IST (Updated: 19 Feb 2022 8:27 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

சென்னை,

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி  மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 

வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்

சென்னையில் , காலை 9 மணி நிலவரப்படி மந்தமான வாக்குப்பதிவே நடந்தது .அதன்பின் நேரம் செல்ல செல்ல வாக்குப்பதிவு பகலில் விறுவிறுப்படைந்தது. 

இந்நிலையில்  சென்னை மாநகராட்சி தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 41.68   சதவீதம்  வாக்குகள் பதிவாகியுள்ளது.

Next Story