மனிதநேயம் குறையாத காவல்துறை அதிகாரி; பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு
வாக்களிக்க அழைத்து வந்து ரோட்டில் விட்டு சென்ற மாற்றுதிறனாளியை பணியில் இருந்த காவல் அதிகாரி தன் வாகனத்தில் அழைத்து சென்று வீட்டில் விட்டதற்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட மாவட்ட குற்ற பதிவேடு கூடம் சிறப்பு துணை ஆய்வாளர் கண்ணன் ஊராட்சி ஒன்றிய அலுவலக பகுதியிலுள்ள வார்டு எண் 2 வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் இங்கு உள்ள வாக்குச் சாவடிக்கு மாற்றுத்திறனாளி வடிவேல் என்பவரை பூத் ஏஜெண்டுகள் அழைத்து வந்து வாக்களித்து விட்டு வடிவேலுவை அமர வைத்து விட்டு சென்று விட்டார்கள். ஜனநாயக கடமையாற்றிய மாற்றுத்திறனாளி வடிவேலுவை அழைத்து வந்த பூத் ஏஜென்ட் திரும்ப அழைத்து செல்லாமல் சுமார் 2 மணி நேரம் தனது வீட்டுக்கு திரும்ப வழியில்லாமல் அப்பகுதியில் அமர்ந்துள்ளார். இந்நிலையில் அங்கு பணியில் இருந்த சிறப்பு துணை ஆய்வாளர் கண்ணன் எதற்காக அமர்ந்திருக்கிறீர்கள் என வினவினார்.
வாகனம் இல்லாமல் இருப்பது அறிந்து உடனடியாக மற்றொரு காவலரை தனது இடத்தில் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தி விட்டு தனது சொந்த இருசக்கர வாகனத்தில் மாற்றுத்திறனாளி வடிவேலை அழைத்து வீட்டிற்கு கொண்டு சென்று விட்டு வந்தார். இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் சிறப்பு துணை ஆய்வாளர் கண்ணனை வெகுவாக பாராட்டினார்கள். கடமை பணியிலும் கருணை பணி செய்தற்காக சிங்கம்புணரி பகுதி மக்கள் சிறப்பு துணை ஆய்வாளர் கண்ணனுக்கு பாராட்டுகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story