வேலூரில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் தனியார் நிறுவன காவலாளிகள்


வேலூரில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் தனியார் நிறுவன காவலாளிகள்
x
தினத்தந்தி 19 Feb 2022 9:11 PM IST (Updated: 19 Feb 2022 9:11 PM IST)
t-max-icont-min-icon

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்றதால் தனியார் நிறுவன காவலாளிகள் போக்குவரத்தை சீர்செய்யும் பணியை மேற்கொண்டனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்றதால் வேலூர் நகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நகரின் முக்கிய இடங்களில் தனியார் ஏஜென்சி காவலாளிகள் பணி அமர்த்தப்பட்டனர். அதன்படி வேலூர் மக்கான், பழைய பஸ் நிலையம், காமராஜர் சிலை போன்ற இடங்களில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய தனியார் துறை காவலாளிகள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது போக்குவரத்து விதிகளை மீறி, தங்களின் அறிவுரையை பின்பற்றாத வாகன ஓட்டிகளின் வாகன எண்ணை காவலாளிகள் பதிவு செய்தனர். இந்த வாகன எண்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் அவர்கள் போக்குவரத்து விதியை மீறிவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என காவலாளிகள் தெரிவித்தனர்.

Next Story