குழந்தைகளுக்குத் தமிழிலேயே பெயர் சூட்டுங்கள்...! மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


குழந்தைகளுக்குத் தமிழிலேயே பெயர் சூட்டுங்கள்...!  மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 20 Feb 2022 3:47 PM IST (Updated: 20 Feb 2022 3:47 PM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயர் சூட்டுங்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் நடைபெற்ற, திமுக துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, இல்ல திருமண விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திய முதல்-அமைச்சர், அன்பகம் கலையின் கட்சி பணிகள் மற்றும் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில், 

கழகத்தின் மீது மாறாத பற்றுடன் என்னோடு பயணித்துவரும் கழகத் துணை அமைப்புச் செயலாளர் திரு. அன்பகம் கலை அவர்களது மகன் கலை கதிரவன் - சந்தியா பிரசாத் இணையரின் திருமணத்தை நடத்தி வைத்தேன். குழந்தைகளுக்குத் தமிழிலேயே பெயர் சூட்டுங்கள் என மணமக்களையும் உங்களையும் கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Next Story