நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 5 வார்டுகளில் நாளை மறுவாக்குப்பதிவு
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகம் முழுவதும் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் வார்டு எண் 51 (1174 வாக்குச்சாவடி) 179 -வது வார்டு (5059 வாக்குச்சாவடி)
* சென்னை வண்ணாரப்பேட்டை 179வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 1174-ல் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும்.
* சென்னை பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் வார்டு எண் 179 வாக்குச்சாவடி எண் 5059-ல் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும்.
* அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சி 16-ம் வார்டு வாக்குச்சாவடிகள் 16 எம்,15 டபிஎல்யூ இல் மறுவாக்குப்பதிவு நடைபெறும்.
* மதுரை திருமங்கலம் நகராட்சி 17-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 17-ல் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும்.
* தி.மலை நகராட்சி 25-ம் வார்டு வாக்குச்சாவடிகள் 57 எம், 57 டபிஎல்யூ இல் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும்.
மறு வாக்குப்பதிவு வாக்குச்சாவடிகளில் வாக்காளரின் இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story