மனைவியிடம் கடன் வசூலிக்க வந்தவரை கத்தியால் குத்திய கணவன்
மனைவியிடம் கடன் வசூலிக்க வந்தவரை கணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் முருகானந்தம்( வயது 36) இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகின்றார். முருகானந்தம் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவரிடம் ரூ.5 ஆயிரம் கடன் கொடுத்து உள்ளார்.
இந்த கடனை வசூலிப்பதற்காக வி.ஜி ராவ்நகரில் உள்ள சிவா வீட்டுக்கு முருகானந்தம் சென்று உள்ளார். அங்கு அவர் இல்லாததால் சிவா மனைவியின் தோழி வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளார். இது பற்றி எனக்கு தெரியாது என்று அவர் தெரிவித்தும் மீண்டும் மீண்டும் வீட்டுக்கு வந்து முருகானந்தம் தொந்தரவு செய்துள்ளார்.
பின்னர் இதுபற்றிய தகவலை கணவன் சாந்து முகமதுவிடம் அவர் தெரிவித்து உள்ளார். இதனை கேட்டு கோபமடைந்த கணவன் முகமது, முருகானந்தன் வீட்டுக்கு சென்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த முகமது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகானந்தத்தை குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்
இதில் படுகாயம் அடைந்த முருகானந்தத்தை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனை அறிந்த போலீசார் சாந்து முகமது மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Related Tags :
Next Story