வரும் 24-ந் தேதி கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 24-ந் தேதி தொடங்குகிறது.
சென்னை,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2021-22-ம் ஆண்டுக்கான இளநிலை (பி.வி.எஸ்சி. மற்றும் ஏ.எச். மற்றும் பி.டெக்) பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. அதன்படி, 24-ந்தேதி காலை 9 மணிக்கு பி.வி.எஸ்சி மற்றும் ஏ.எச்.-கலையியல் பிரிவு மற்றும் பி.டெக். பட்டப்படிப்புகளில், 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர் களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
25-ந்தேதி பி.வி.எஸ்சி. மற்றும் ஏ.எச். (இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல்), பி.டெக். (உணவுத் தொழில்நுட்பம், கோழியினத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம்) பட்டப்படிப்புகளில் சிறப்பு பிரிவு (விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவபடை வீரர்களின் வாரிசுளுக்கு நடைபெற உள்ளது.
26-ந்தேதி காலை 11.30 மணிக்கு பி.வி.எஸ்சி., ஏ.எச். (இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல்-தொழிற்கல்வி பிரிவு) பட்டப்படிப்புகளில் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான (தொழிற்கல்வி பிரிவு) கலந்தாய்வு நடக்கிறது. இந்த கலந்தாய்வுகள் அனைத்தும் நேரடியாக சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி அண்ணா கலையரங்கத்தில் நடக்க உள்ளது.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 28-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 16-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்து, கல்வி கட்டணம் செலுத்துவது மட்டும் நேரடியாக நடைபெறும், அதுதவிர மற்ற நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவே நடக்கிறது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற இணையதளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
Related Tags :
Next Story