தமிழக ஊர்தி மாணவர்களை ஈர்த்துள்ளது; முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் மகிழ்ச்சி


தமிழக ஊர்தி மாணவர்களை ஈர்த்துள்ளது;  முதல்- அமைச்சர்  மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 21 Feb 2022 5:41 PM IST (Updated: 21 Feb 2022 5:41 PM IST)
t-max-icont-min-icon

குடியரசு நாள் விழா அணிவகுப்பில் இடம் மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஊர்தி, உங்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்து, மாணவர்களையும் ஈர்த்துள்ளது என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் மறுக்கப்பட்ட தமிழக ஊர்தி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பினையும் பாராட்டுதலையும் பெற்றது. 

சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அலங்கார ஊா்திகளை  அனைத்து மாவட்டங்களில் நகரின் முக்கிய பகுதிகளில் காட்சிப்படுத்தும் பொருட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின், கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
அதன் தொடா்ச்சியாக சென்னை மெரீனா கடற்கரையில் அந்த அலங்கார ஊா்திகள் பொதுமக்கள் பாா்வைக்காக  நேற்று காட்சிப்படுத்தப்பட்டன. 

சென்னை மெரினாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்திகளை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். அப்போது அலங்கார ஊர்திகளை பார்க்க வந்த பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய மு.க ஸ்டாலின் செல்பியும் எடுத்துக்கொண்டார்.

இந்த நிலையில், இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள மு.க ஸ்டாலின், ”குடியரசு நாள் விழா அணிவகுப்பில் இடம் மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஊர்தி, உங்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்து, மாணவர்களையும் ஈர்த்துள்ளது. மெரினாவில் ஊர்திகளைக் காண வந்த மாணவச் செல்வங்களுடன் பெருமகிழ்வுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டேன்” என்றார். 


Next Story