"எங்களுக்கு வீட்டில் இருக்கவே அச்சமாக உள்ளது" - ஜெயக்குமாரின் மனைவி பேட்டி
தி.மு.க. தொண்டரின் சட்டையை கழற்றிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னையில் வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கிய வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். தி.மு.க.வை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் சென்னை தண்டையார் பேட்டை போலீசார், ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
தாக்குதல், கலகம் செய்ய தூண்டுதல், கொலை மிரட்டல், ஆபாசமாக திட்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யபப்பட்டது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கைது செய்த பின்னர் அவரது மனைவி ஜெயக்குமாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
எனது கணவர் மீது வழக்குகள் ஏதும் இல்லை என்பதால் அவரை கைது பண்ணி ஏதும் பண்ணவேண்டும் என்று நினைக்கிறார்களா? என ஒன்றும் புரியாமல் உள்ளது. எனது கணவரை பழிவாங்கும் விதமாக கைது செய்துள்ளனர்.
எனது கணவரை மட்டுமே தனியாக அழைத்து சென்றனர். எங்களுக்கு மிகவும் பயமாக உள்ளது. வீட்டில் இருக்கவே அச்சமாக உள்ளது. உணவு உண்ணும் போது எனது கணவரை கைது செய்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story