இன்று வாக்கு எண்ணிக்கை தி.மு.க. முகவர்கள் கண்ணும், கருத்துமாக செயலாற்ற வேண்டும்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில், தி.மு.க. முகவர்கள் கண்ணும், கருத்துமாக செயலாற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவு பெரிதும் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. எந்த வகையிலும் வாக்காளர்களுக்கு இடர்பாடு நேர்ந்திடாத வண்ணம் இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஒரு சில இடங்களில் 70 சதவீதத்துக்கு மேல் வாக்குப்பதிவும், ஒரு சில இடங்களில் 50 சதவீதத்துக்கு கீழ் வாக்குப்பதிவும் நடைபெற்றிருப்பதை மாநில தேர்தல் ஆணையம், புள்ளிவிவரங்களுடன் விரிவாக வெளியிட்டுள்ளது.
அரசியல் யுத்தமாக கருதவில்லை
“உள்ளாட்சியிலும் தொடரட்டும் நல்லாட்சி - நம்ம ஆட்சி” என்பதே நமது தி.மு.க.வின் லட்சியமும், நோக்கமும் ஆகும். அதற்கேற்ற வகையில், தேர்தல் களத்தை எதிர்கொண்டோம். கடந்த 9 மாதங்களில், நாட்டு மக்களுக்காக நிறைவேற்றிய முக்கியமான சாதனைகளை மட்டும் முன்வைத்து தி.மு.க. வாக்கு கேட்டது. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில், தி.மு.க. அரசு மீது நாளுக்கு நாள் வளர்ந்து பெருகி வரும் நம்பிக்கையேதான் நம் பலம்.
தி.மு.க.வைப் பொறுத்தவரை, இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அரசியல் யுத்தமாக கருதவில்லை. ஆட்சி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளமாகவே கருதி களம் கண்டது. தி.மு.க. வேட்பாளர்களும், பிரசாரம் செய்த நிர்வாகிகளும், நமது அரசின் சாதனைகளையே முன்னிறுத்தினார்கள். வீடு வீடாக சென்று, ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து வாக்கு சேகரித்தார்கள்.
தி.மு.க.வின் வெற்றி உறுதி
புதுமையான முறையில், மக்களின் மனதில் பதிகிற வகையில், நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் பரப்புரைகளை மேற்கொண்டார்கள். வாக்கு சேகரிக்கும்போதே தி.மு.க.வின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில், தேர்தல் களம் அமைந்துவிட்டதால், எதிர்க்கட்சியினர் தங்களின் படுதோல்வியை மறைப்பதற்கு அவதூறுகளை, பொய் பரப்புரைகளை அள்ளிவிட்டனர்.
தி.மு.க.வினர் யாரேனும், எங்கேனும் ஓரிரு இடங்களில் சற்று அத்துமீறிச் செயல்படுகிறார்கள் என்ற செய்தி வந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பல இடங்களில் எதிர்க்கட்சியினர் எல்லை மீறி சென்றதை பத்திரிகைகள் - தொலைக்காட்சி ஊடகங்கள் - சமூக வலைத்தளங்கள் வெளிப்படுத்த தவறவில்லை.
சட்டரீதியாக எதிர்கொள்ளும்
முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் சட்டத்தை தன் கையிலே எடுத்துக்கொண்டு, தி.மு.க. நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்தியிருக்கிறார். தி.மு.க. இதனை சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும். அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள் என்பது நிச்சயம். சட்டம் தன் கடமையைச் செய்யும்.
தி.மு.க.வினர் செய்ய வேண்டிய மக்கள் பணிகள் நிறைந்திருக்கின்றன. மக்களின் தீர்ப்பு தி.மு.க.வுக்கு சாதகமாகவே அமையும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. எனினும், அது முறைப்படி அறிவிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியது நம் கடமை.
தி.மு.க. முகவர்கள்
இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை தொடங்கி, நிறைவடையும் வரை தி.மு.க. முகவர்கள் கண்ணும், கருத்துமாக செயலாற்ற வேண்டும். ஒவ்வொரு வார்டாக வாக்குகள் எண்ணப்பட்டு, வெற்றி அறிவிக்கப்பட்டு, அதற்குரிய சான்றிதழ் வழங்கப்படும் வரை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கான தி.மு.க. முகவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அனைத்து வார்டுகளின் வாக்குகளும் முழுமையாக எண்ணப்பட்டு, அனைவருக்கும் முறைப்படி சான்றிதழ்கள் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
வெற்றி உறுதி; அதைவிட கடமையும், பொறுப்பும் நமக்கு மிகுதியாக இருக்கிறது. வெற்றி கொண்டாட்டங்களை குறைத்து, மக்கள் பணியை கூடுதலாக செய்ய வேண்டிய கட்டாயமான இடத்தில் நாம் இருக்கிறோம்.
வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்களை கொண்டு மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகர்மன்றங்களுக்கான தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் மார்ச் 4-ந் தேதி நடைபெறும் மறைமுக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்கள்.
தேர்தல் முறை, மறைமுகமாக இருந்தாலும், நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தி.மு.க. தலைமையால் அறிவிக்கப்படுகிறவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, முழுமையான அளவில் வெற்றி பெறச்செய்ய வேண்டியதும் தி.மு.க. நிர்வாகிகளின் கடமை.
கூட்டணி கட்சிகளுக்கு கண்ணியமான அளவில் ஒதுக்கப்படும் பதவிகளுக்கும் கட்டுப்பாடான முறையில் ஆதரவளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டியதும் தி.மு.க.வினரின் பொறுப்பு. அதில் எள்முனையளவுகூட பாதிப்பு இருக்கக்கூடாது.
மனதில் கொள்ளுங்கள். மக்கள் உறுதியாக நம் பக்கம். அவர்களின் சிதையாத நம்பிக்கைக்குரியவர்கள் நாம். நாளை விடியும். உதயசூரியன் உலா வரும். உள்ளாட்சியிலும் நல்லாட்சி உறுதியாக மலரும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story