உள்ளாட்சி தேர்தலில் வெற்றி யாருக்கு? பலத்த பாதுகாப்புடன் இன்று ஓட்டு எண்ணிக்கை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது. வேட்பாளர்களின் முன்னணி நிலவரம் காலை 10 மணிக்கு பிறகு வெளியாகும்.
சென்னை,
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது.
61 சதவீத வாக்குகள் பதிவு
மாநகராட்சி பகுதியில் 1,369 வார்டுகள், நகராட்சி பகுதியில் 3,824 வார்டுகள், பேரூராட்சி பகுதியில் 7,408 வார்டுகள் என மொத்தம் 12,601 வார்டுகளுக்கு நடந்த இந்த தேர்தலில் மொத்தம் 57,746 பேர் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவு முடிவில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவுக்கு பின்பு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன.
3 அடுக்கு பாதுகாப்பு
வாக்கு எண்ணும் மையங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு என தனித்தனியாக ஏற்படுத்தப்பட்ட ஸ்ட்ராங்க் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறையில் வார்டு வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன.
முறைகேடு புகார் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது.
இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு எடுத்து செல்லப்பட்டன. 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இன்று ஓட்டு எண்ணிக்கை
அதாவது வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வெளியே, நுழைவு வாயில், ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறை ஆகிய பகுதிகளில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பாதுகாப்பு அறை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் இருந்து வருகின்றனர். இதுதவிர மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்தல் அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேர்தல் ஆணையர் ஆலோசனை
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளன. வாக்கு எண்ணிக்கை குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
வாக்கு எண்ணிக்கையை எப்படி மேற்கொள்ள வேண்டும் என வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கையை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அமைதியான முறையில் முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளான கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
8 முதல் 14 மேஜைகள்
தடையில்லா மின்சாரம், கணினி வசதி, உணவு மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் மையங்களில் 8 முதல் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை பொறுத்து இந்த மேஜைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வார்டு வாரியாக ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.
வாக்குகள் எண்ணப்படும் இடத்திற்குள் வேட்பாளர்கள், அவர்களது தலைமை முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வேட்பாளரின் தலைமை முகவர் மட்டும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்போன் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
தபால் ஓட்டுகள்
காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதும் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். தபால் ஓட்டுகளை பிரித்து யாருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பது அனைத்து முகவர்களுக்கும் தெரியும் வகையில் காண்பிக்கப்படும். இதன்பின்பு, யாருக்கு அந்த ஓட்டு பதிவாகி உள்ளதோ அவரது கணக்கில் அந்த வாக்கு சேர்க்கப்படும்.
இதன்பின்பு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்படும்.
ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து வரப்பட்டு 14 மேஜைகளில் வைக்கப்படும்.
அதிகபட்சமாக 4 சுற்றுகள்
பின்னர் கன்ட்ரோல் யூனிட்டில் இருக்கும் ‘சீல்' வேட்பாளர்கள் முன்னிலையில் உடைக்கப்படும். இதைத்தொடர்ந்து கன்ட்ரோல் யூனிட்டில் சின்னம் வாரியாக பதிவான வாக்குகள் சேகரிக்கப்படும்.
இதுவே, ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையாக கருதப்படும். மாநகராட்சி, நகராட்சியை பொறுத்தமட்டில் பெரும்பாலான வார்டுகளுக்கான தேர்தல் 40-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் நடைபெற்றதால் அதிகபட்சமாக 4 சுற்றுகள் வரை ஓட்டுகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
பேரூராட்சி வார்டுகளை பொறுத்தமட்டில் ஒரு வார்டுக்கு 10 முதல் 20 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்றதால் ஓரிரு சுற்றுகளில் முடிவுகள் வெளியிடப்படும். இதுபோன்று ஒவ்வொரு வார்டாக ஓட்டுகள் எண்ணப்படும்.
பகல் 11 மணி முதல் முடிவுகள்
வாக்கு எண்ணிக்கை முழுமையாக வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு சுற்று முடிவு விவரம் வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியில் உள்ள அறிவிப்பு பலகையில் ஓட்டப்படும். மேலும், ஒலி பெருக்கி மூலமும் அறிவிக்கப்படும்.
தபால் வாக்குகளை பொறுத்தமட்டில் ஒவ்வொரு வார்டிலும் குறைவான எண்ணிக்கையிலே இருக்கும் என்பதால் காலை 8.30 மணியில் இருந்து 9 மணிக்குள் எண்ணி முடிக்கப்பட்டு விடும்.
முதல் சுற்று முடிவு, முன்னணி நிலவரம் காலை 10 மணி முதல் தெரியவரும். அதேவேளையில் காலை 11 மணி முதல் வெற்றி பெற்றவர்கள் விவரம் ஒவ்வொன்றாக தெரிந்து விடும்.
மாலை 3 மணிக்குள் இறுதி முடிவு
ஓட்டு எண்ணிக்கையில் எந்தவித பிரச்சினையும் இல்லாதபட்சத்தில் மாலை 3 மணிக்குள் அனைத்து வார்டுகளின் முடிவுகளும் வெளியாகி விடும் என தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் வாக்கு எண்ணும் மையத்திலேயே வெற்றி சான்றிதழ் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கவுன்சிலர்களின் பதவியேற்பு மற்றும் முதல் கூட்டம் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி நடக்கிறது.
இதைத்தொடர்ந்து 4-ந் தேதி மறைமுக தேர்தல் மூலம் மாநகராட்சி மேயர், துணைமேயர், நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை வார்டு கவுன்சிலர்கள் தேர்வு செய்கிறார்கள்.

Related Tags :
Next Story