இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!


இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
x
தினத்தந்தி 22 Feb 2022 6:52 AM IST (Updated: 22 Feb 2022 6:54 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 110 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

சென்னை,

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது.  

இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. 

இதற்கிடையில், கடந்த 109 நாட்களாக விலையில் மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், 110-வது நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலையில் நீடிக்கிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story