சென்னை; ஆலந்தூர் மண்டலத்தில் 1 மணி நேரமாகியும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை!
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் 1 மணி நேரமாகியும் வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடங்கப்படவில்லை.
சென்னை,
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் வாக்குகள் எண்ணும் பணியில் தாமதம் ஏற்பட்டது. அங்கு 1 மணி நேரமாகியும் வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு நிலவுகிறது.
முன்னதாக, சென்னை சோழிங்கநல்லூர் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்ததால் கடலூரில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.பின்னர் பூட்டு உடைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
அதேபோல, கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம் புனித வளனார் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனது. அங்கு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்ததால் கடலூரில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டி பேரூராட்சிக்கான தபால் ஒட்டுகள் எண்ணும் பணி தாமதமாக தொடங்கியது. தபால் ஓட்டுப்பெட்டியின் சாவி இல்லாததால் முகவர்கள் முன்னிலையில் ஓட்டுப்பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டது.அதன்பின் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
Related Tags :
Next Story