வேலூர் மாநகராட்சியில் திருநங்கை கங்கா நாயக் வெற்றி..!
வேலூர் மாநகராட்சி 37 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா நாயக் வெற்றி பெற்றுள்ளார்.
வேலூர்,
வேலூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி 19ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல், தி.மு.க. உறுப்பினராக இருந்து வரும் திருநங்கை கங்கா நாயக், இத்தேர்தலில் தி,மு.க. கட்சி சார்பாக 37 வது வார்டில் போட்டியிட்டார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திருநங்கை கங்கா நாயக் 2131 வாக்குகள் பெற்று 15 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற அவரை சக திருநங்கைகள் ஆரத் தழுவி மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story