சேலம்: எடப்பாடி பழனிசாமி வீடு அமைந்துள்ள 23-வது வார்டில் திமுக வெற்றி - அதிமுகவினர் அதிர்ச்சி
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடு அமைந்துள்ள 23-வது வார்டில் 1,359 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சிவகாமி வெற்றி பெற்றுள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளுக்கு கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் 16 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன.
அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் சேலம், கோவை உள்ளிட்ட இடங்களிலும் திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. இந்நிலையில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட எடப்பாடி பழனிசாமி வீடு அமைந்துள்ள 23-வது வார்டில் திமுக வேட்பாளர் சிவகாமி அறிவழகன் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அந்த வார்டில் உள்ள அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லம் உள்ள நெடுஞ்சாலை நகர் பகுதியான 23-வது வார்டில் 1,359 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சிவகாமி வெற்றி பெற்றுள்ளார்.
Related Tags :
Next Story