தென்காசி ,நகராட்சியில் 14,15 வார்டுகளில் பா.ஜ.க. வேட்பாளர்களான அண்ணன்,தங்கை வெற்றி..!
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது .
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவானது மாநகராட்சி பகுதியில் 1,369 வார்டுகள், நகராட்சி பகுதியில் 3,824 வார்டுகள், பேரூராட்சி பகுதியில் 7,408 வார்டுகள் என மொத்தம் 12,601 வார்டுகளுக்கு இந்த தேர்தல் நடந்தது.
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் தென்காசி நகராட்சியில் 14,15 வார்டுகளில் பா.ஜ.க. வேட்பாளர்களான அண்ணன்,தங்கை வெற்றி பெற்றுள்ளனர்.
Related Tags :
Next Story