தமிழகத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த அசாதுதீன் ஓவைசி கட்சி - ஒரு வார்டில் வெற்றி
தமிழகத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த அசாதுதீன் ஓவைசி கட்சி ஒரு வார்டில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வெற்றியை பதிவு செய்து வரும் நிலையில்,
தமிழகத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது அசாதுதீன் ஓவைசியின் மஜ்லீஸ் கட்சி. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாணியம்பாடி நகராட்சிக்குப்பட்ட 19-வது வார்டில் அசாதுதீன் ஓவைசி கட்சி சார்பில் பட்டம் சின்னத்தில் போட்டியிட்ட நபிலா வக்கீல் அகமது வெற்றி பெற்றுள்ளார்.
Related Tags :
Next Story