அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி தோல்வி


அ.தி.மு.க. கூட்டணியில்  போட்டியிட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி தோல்வி
x
தினத்தந்தி 22 Feb 2022 6:10 PM IST (Updated: 22 Feb 2022 6:10 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பரிதி இளம் சுருதியிடம் 7 ஆயிரத்து 268 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

சென்னை,

சமூக சமத்துவ படை தலைவரான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி, சென்னை மாநகராட்சி தேர்தலில் அண்ணாநகர் மண்டலத்துக்குட்பட்ட 99-வது வார்டில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிட்டார். 

அவருக்கு 2 ஆயிரத்து 423 வாக்குகள் கிடைத்தது. இந்த வார்டில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பரிதி இளம் சுருதியிடம் 7 ஆயிரத்து 268 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.


Next Story