குக்கர் மூடியால் அடித்து தொழிலாளி படுகொலை - சமையல் மாஸ்டர் கைது
குற்றாலத்தில் குக்கர் மூடியால் அடித்து சமையல் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சமையல் மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி,
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ராமச்சந்திரபுரம் தெருவைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் பாலமுரளி (வயது 48), சமையல் தொழிலாளி. நெல்லை சத்திரம் புதுக்குளம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (53). சமையல் மாஸ்டராக உள்ளார்.
இவர்கள் 2 பேரும் வெளியிடங்களுக்கு சென்று சமையல் செய்து கொடுத்துவிட்டு வருவது வழக்கம். எங்கு சென்றாலும் 2 பேரும் சேர்ந்தே சென்று வந்தனர்.
இந்த நிலையில் பழைய குற்றாலம் ரோட்டில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் 2 பேரும் கடந்த 4 நாட்களாக தங்கி இருந்து சிலருக்கு சமையல் செய்து கொடுத்து வந்தனர். மேலும் 2 பேருக்கும் மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் 2 பேரும் மது குடித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வேலை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த முருகன் அருகில் கிடந்த குக்கர் மூடியால் பாலமுரளி தலையில் பலமாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த பாலமுரளி துடிதுடித்து சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து உடனடியாக குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பாலமுரளி உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ைவத்தனர்.
இதுெதாடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெறிச்செயலில் ஈடுபட்ட முருகனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குற்றாலத்தில் குக்கர் மூடியால் அடித்து சமையல் தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story