கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. உள்ளாட்சி அமைப்புகளில் 75%-க்கும் மேலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 21 மாநகராட்சிகளில் அனைத்தையும் திமுக கைப்பற்றியுள்ளது. திமுகவின் வெற்றியை அக்கட்சித் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, திமுக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார்.
அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story