சில வார்டுகளில் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி 2-ம் இடம் பிடித்த பா.ஜ.க.
பா.ஜ.க. சில வார்டுகளில் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி 2-ம் இடம் பிடித்துள்ளது.
சென்னை,
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ஜ.க. தனித்து களம் கண்டது. சென்னை மாநகராட்சி வார்டு முடிவுகளில் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே போட்டி நிலவினாலும், 174-வது வார்டில் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி பா.ஜ.க. 2-வது இடத்தை பிடித்தது.
இந்த வார்டில் தி.மு.க. வேட்பாளர் ராதிகா 6,250 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பா.ஜ.க. 1847 வாக்குகளை பெற்று 2-வது இடத்திலும், அ.தி.மு.க. 1,395 வாக்குகளை பெற்று 3-வது இடத்தையும் பெற்றது. அதேபோல் 19-வது வார்டிலும் பா.ஜ.க. 2-வது இடத்தை பிடித்தது. இந்த வார்டில் தி.மு.க. வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 3-வது இடத்தை பெற்றது. இதேபோல், 54 மற்றும் 187 ஆகிய வார்டுகளிலும் பா.ஜ.க. 2-வது இடத்தை பிடித்துள்ளது.
Related Tags :
Next Story