தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 700-க்கு கீழ் குறைந்தது


தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 700-க்கு கீழ் குறைந்தது
x
தினத்தந்தி 22 Feb 2022 10:50 PM IST (Updated: 22 Feb 2022 10:50 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,46,388 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,989 ஆக உயர்ந்துள்ளது.  அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில்  2,375பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,96,078 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் தற்போது 9 ஆயிரத்து 321 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 61,469 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

Next Story