செங்கம் பேரூராட்சியில் வெற்றி பெற்ற பா.ம.க. பெண் வேட்பாளர் கடத்தப்பட்டதால் பரபரப்பு
செங்கம் பேரூராட்சியில் வெற்றி பெற்ற பா.ம.க. பெண் வேட்பாளர் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை,
மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 8 இடத்தையும், அ.தி.மு.க. 7 இடத்தையும் பா.ம.க., பா.ஜ.க., மனிதநேய மக்கள் கட்சி தலா ஒரு இடத்தையும் கைப்பற்றியது.
பெரும்பான்மையை நிரூபிக்க 2 கட்சிகளும் மோதும் நிலையில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர் அருள்ஜோதி சிலர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பா.ம.க.வை சேர்ந்தவர்கள் செங்கம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேட்பாளர் கடத்தி செல்லப்பட்டதை கண்டித்தும், அவரை விடுவிக்க வேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில் செங்கம் பெருமாள் கோவில் தெரு பகுதியில் வாக்கு மையத்திற்கு சற்று தொலைவில் பா.ம.க. வேட்பாளரை விடுவிக்க கோரி தி.மு.க.வினருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பரபரப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். மேலும் அந்த பகுதியில் கூடியிருந்தவர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். இதைதொடர்ந்து பா.ம.க. சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர் அருள்ஜோதி பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு காரில் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டார்.
பின்னர் பா.ம.க.வினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் செங்கம் பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் நேரடியாக மோதுவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story