அதிக இடங்களை கைப்பற்றி அபார சாதனை கொங்கு மண்டலத்தில் வாகை சூடிய தி.மு.க.
கொங்கு மண்டலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க. வெற்றி பெற்று வாகைசூடியுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதுதான் கொங்கு மண்டலம்.
இதனை அ.தி.மு.க.வின் கோட்டை என்று அக்கட்சியினர் கூறுகிறார்கள். கடந்த 2011 மற்றும் 2016 தேர்தல்களில் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைவதற்கு முக்கிய பங்கு வகித்தது கொங்கு மண்டலத்தில் பெற்ற வாக்குகள்தான்.
கடந்த ஆண்டு (2021) நடந்த சட்டமன்றத்தேர்தலில் அ.தி.மு.க. தமிழகத்தின் பிற பகுதிகளில் குறைவான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை இழந்தாலும், கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் அந்த கட்சி பெற்றது. இதேபோல் சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் அதிக இடங்களை பிடித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
கோவைக்கு தனிக்கவனம்
தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோதும் ஆளும் தி.மு.க.வால் கோவையில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதனால் உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க.வினர் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டனர்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அதற்கான பொறுப்பை தி.மு.க. தலைமை ஒப்படைத்தது. அவரது வழிகாட்டுதலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியை செவ்வனே செய்து தற்போது வெற்றிக்கனியை தி.மு.க. ருசித்துள்ளது.
வாகை சூடிய தி.மு.க.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்தநிலையில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணியே பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது.
அ.தி.மு.க. கோட்டையாக பார்க்கப்பட்ட கொங்கு மண்டலத்திலும் இந்த வெற்றியை தி.மு.க. பெற்றது. சட்டமன்ற தேர்தலில் இழந்த வெற்றியை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெற்றதால் அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்த வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சியை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியுள்ளது. இதுதவிர கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் காரமடை, க.கூடலூர், மதுக்கரை, கருமத்தம்பட்டி ஆகிய 7 நகராட்சிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் பேரூராட்சிகளிலும் ஆளும் கட்சியே வெற்றி பெற்றுள்ளது.
அ.தி.மு.க. அதிர்ச்சி
உள்ளாட்சி தேர்தல் வெற்றி மூலமாக கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வினருக்கு தி.மு.க. அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது, கோவையை போல மற்ற கொங்கு மாவட்டங்களிலும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுகளிலும் தி.மு.க. கூட்டணியே வெற்றியை ருசித்துள்ளது.
ஈரோடு மாநகராட்சியை கைப்பற்றியுள்ள தி.மு.க, மாவட்டத்தில் உள்ள பவானி, கோபி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி என 4 நகராட்சிகளையும் ஆளும் தி.மு.க.வே வென்றுள்ளது.
இதேபோல் திருப்பூர் மாநகராட்சியிலும் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளையும் அக்கட்சி கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 15 பேரூராட்சிகளில் 14 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியுள்ள நிலையில் ஒரு பேரூராட்சியை மட்டும் அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி
தர்மபுரி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. 9 பேரூராட்சிகளிலும் அக்கட்சியினரே வென்றுள்ளனர். கிருஷ்ணகிரி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியுள்ள நிலையில், மொத்தம் உள்ள 6 பேரூராட்சிகளில் 5 பேரூராட்சிகளையும் அக்கட்சியே வென்றுள்ளது. கெலமங்கலம் பேரூராட்சியில் இழுபறி ஏற்பட்டு உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. குமாரபாளையம் நகராட்சி இழுபறியில் உள்ளது. மொத்தம் உள்ள 19 பேரூராட்சிகளில் வெங்கரை பேரூராட்சியை தவிர்த்து 18 பேரூராட்சிகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர கரூர் மாநகராட்சி தி.மு.க. வசமாகியுள்ளது.
எடப்பாடி நகராட்சியும் தி.மு.க வசம்
இதேபோல் சேலம் மாவட்டத்திலும் சேலம் மாநகராட்சியை தி.மு.க அங்குள்ள பெரும்பாலான நகராட்சிகளையும் தனதாக்கி அபார சாதனையை நிகழ்த்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 31 பேரூராட்சிகளில் 25 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. 1 பேரூராட்சியில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. 5 பேரூராட்சிகளில் இழுபறி நிலை நீடிக்கிறது.
எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டு
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடி நகராட்சியை தி.மு.க. வெற்றி கண்டுள்ளது. சேலம் நெடுஞ்சாலை நகரில் எடப்பாடி பழனிசாமியின் வீடு உள்ளது. அவரதுவீடு உள்ள 23-வது வார்டிலும் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

Related Tags :
Next Story