மக்களை தேடி மருத்துவம் திட்டம்: வீடு தேடிச் சென்று மருந்து பெட்டகம் வழங்கிய மு.க.ஸ்டாலின்
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு வீடு தேடிச் சென்று மருந்து பெட்டகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
தமிழக சுகாதாரத் துறையின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை கடந்த ஆக. 5-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. 45 வயதும், அதற்கு மேற்பட்ட உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாலப்பாக்கம் ஊராட்சியில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு வீடு தேடி சென்று மருந்து பெட்டகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் டயாலிசிஸ் செய்யும் விழுப்புரத்தை சேர்ந்த மாணவன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடி நன்றி தெரிவித்தார்.
முதல்-அமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் 3 லட்சம் மதிப்பிலான செயற்கை கால்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
Related Tags :
Next Story