காதலுக்கு எதிர்ப்பு: இளம் காதலர்கள் ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை..!
குடியாத்தம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ரெயில் முன் பாய்ந்து இளம் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம்,
குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் அடுத்த சென்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் திரிஷா (16), கீழ் ஆலத்தூரை சேர்ந்தவர் யஸ்வந்த் (18) ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்கள் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காதலர்கள் இருவரும் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறினர். மோட்டார் சைக்கிளில் சென்று தண்டவாளம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு குடியாத்தம் காவனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்னை ஜோலார்பேட்டை நோக்கி செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்தும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story