கடந்த 7 ஆண்டுகளில் கிராமங்களுக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன - பிரதமர் மோடி


கடந்த 7 ஆண்டுகளில் கிராமங்களுக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 23 Feb 2022 11:23 AM IST (Updated: 23 Feb 2022 11:28 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து கிராமங்களுக்கும் கழிவறை, மின்சாரம், அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம்   ஏற்பாடு செய்த  காணொலி வாயிலான கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது:- 

இந்த ஆண்டு பட்ஜெட், கிராமப்புற வளர்ச்சிக்கும், கிராமங்களில் முறையான உள்கட்டமைப்பை உறுதி செய்வதற்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

 குடிமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 4 கோடி குடிநீர் இணைப்பை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.  

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான பல திட்டங்கள் கடந்த 7 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அனைத்து கிராமங்களுக்கும் கழிவறை, மின்சாரம், அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் குடிநீர் தேவையை மாநில அரசுகள் பூர்த்தி செய்ய வேண்டும். 

கிராமங்களுக்கு டிஜிட்டல் வசதி என்பது லட்சியம் அல்ல,  அவை கிராமங்களுக்கும் தேவை,  இவற்றின் மூலம் கிராமங்களில் உள்ள இளைஞர்களின் திறன் அதிகரிக்கும்.

வளரும் கிராமங்களுக்கு, வீடுகள் மற்றும்  அதன் நிலங்களின் சரியான எல்லை நிர்ணயிப்பது அவசியம். சுவாமித்வா யோஜனா இதை எளிதாக்குகிறது. இந்த திட்டத்தின் கீழ், இதுவரை 40 லட்சம்  அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

Next Story