திடீரென கழன்று ஓடிய பின் சக்கரங்கள்.. சட்டென சுதாரித்த பள்ளிப்பேருந்து ஓட்டுநர்.. பரபரப்பு சிசிடிவி காட்சி
தாராபுரம் அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது தனியார் பள்ளி பேருந்தின் பின் சக்கர டயர் தனியாக கழன்று ஓடியதில் பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் வகுப்பு முடிந்தவுடன் மாணவர்கள் பள்ளி பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பேருந்தின் பின் பக்க டயர் தனியாக கழன்று ஒடியுள்ளது. இதை பார்த்த டிரைவர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இருப்பினும் திடீரென பிரேக் போட்டதால் பேருந்தில் இருந்த 15 மாணவ மாணவிகள் காயமடைந்தனர். இதனால் அருகில் உள்ள மருத்துவமனையில் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தின் சக்கரங்கள் கழன்று ஓடும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து, ``வட்டார போக்குவரத்து அலுவலர் தாராபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள வாகனங்களை சோதனை நடத்தி தரச் சான்றிதழ் வழங்கிய பின்பு பயன்படுத்தப்பட வேண்டும்” எனவும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திடீரென கழன்று ஓடிய பின் சக்கரங்கள்.. சட்டென சுதாரித்த பள்ளிப்பேருந்து ஓட்டுநர்.. பரபரப்பு சிசிடிவி காட்சி | Dharapuram | School Bus https://t.co/PgUSc4CMUO
— Thanthi TV (@ThanthiTV) February 23, 2022
Related Tags :
Next Story