சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்
சபாநாயகர் செல்வம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சிவா குற்றஞ்சாட்டினார்.
சபாநாயகர் செல்வம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் சிவா குற்றஞ்சாட்டினார்.
ஒருவாரம் நடத்த...
புதுவை சட்டசபையில் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக பேச அனுமதிக்கவில்லை என்று கூறி சட்டசபையில் இருந்து தி.மு.க.-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். அதைத்தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு தடையாக உள்ளது. எனவே நீட் விலக்கு மசோதா கொண்டுவர வேண்டும். மின்துறையை தனியார் மயமாக்குவதை தடுக்கவேண்டும். பிரதமர் அறிவித்த பெஸ்ட் திட்டத்தின் நிலை, மாநில அந்தஸ்து பெற எடுக்கப்பட்ட நடவடிக்கை, மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கப்படாதது, மத்திய அரசு கூடுதல் நிதி வழங்காதது, அரசு நிறுவனங்களில பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்குவது, கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்காதது, பொங்கல் பொருட்கள் வழங்கப்படாமல் இருப்பது உள்ளிட்டவற்றை விவாதிக்க சட்டசபை கூட்டத்தை ஒரு வார காலமாவது நடத்த கோரிக்கை வைத்தோம்.
பா.ஜ.க. உறுப்பினர்போல்...
ஆனால் எங்கள் கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படவில்லை. அரசின் குறைகளை சுட்டிக்காட்டியதற்கு பதில் பெற்றுத்தர சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை.
சபாநாயகர் பா.ஜ.க. உறுப்பினரைப்போலவும், அமைச்சர் போன்றும் செயல்படுகிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்
சபாநாயகர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். அவர் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். எனவே நாங்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. கூறினார்.
Related Tags :
Next Story