புதுவை சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு


புதுவை சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 23 Feb 2022 5:51 PM IST (Updated: 23 Feb 2022 5:51 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் இன்று கூடிய சட்டசபையை சபாநாயகர் காலவரையின்றி ஒத்திவைத்தார்

புதுவை சட்டசபை இன்று கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சட்ட முன்வரைவுகளுக்கு இசைவு அளித்ததை சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.
அப்போது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க எதிர்கட்சியினர் வலியுறுத்தினார்கள். ஆனால் அவற்றுக்கு அனுமதி மறுத்த சபாநாயகர் செல்வம் சட்டசபையை காலவரையின்றி ஒத்திவைத்தார். காலை 9.30 மணிக்கு தொடங்கி கூட்டம் 9.50 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தத்தில் 20 நிமிடம் மட்டுமே சபை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story