தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு
x
தினத்தந்தி 23 Feb 2022 6:08 PM IST (Updated: 23 Feb 2022 6:08 PM IST)
t-max-icont-min-icon

அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையம் கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து இதுவரை 1426 பேருக்கு சம்மன் அனுப்பி, 1,048 பேரிடம் அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. இதுவரை 36 கட்டமாக பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் விசாரணைக்கான பதவிக்காலம் பிப்ரவரி 22(நேற்று) முடிவடைந்தது.

இந்த நிலையில் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு (மே 25 வரை) நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பதவிக்காலம் பிப்ரவரி 23.02.2022 முதல் 22.05.2022 நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் இடைக்கால விசாரணை அறிக்கை கடந்த ஆண்டு மே 14 ஆம் தேதி முதல்-அமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Next Story