விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோரின் கடன் மோசடி பணம் ரூ.18,000 கோடி மீட்பு - மத்திய அரசு தகவல்
கடன் மோசடி பணம் ரூ.18,000 கோடி மீட்கப்பட்டு வங்கிகளில் ஒப்படைக்கப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் மத்திய அரசு தரப்பில் சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மெஹ்தா ஆஜராகி வாதாடினார்.
அப்போது அவர் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் தொடர்புடைய வங்கிக்கடன் மோசடி தொடர்பான வழக்குகளில் இதுவரை அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 18 ஆயிரம் கோடி ரூபாய், வங்கிகளில் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story