தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: விசாரணை கமிஷன் பதவி காலம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: விசாரணை கமிஷன் பதவி காலம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு.
சென்னை,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ம் ஆண்டு 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த போராட்டத்தின் 100-வது நாளான 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதியன்று, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி மக்கள் பேரணியாக சென்றனர்.
அப்போது திடீரென்று கலவரம் ஏற்பட்டு, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 2 பெண்கள் உட்பட 13 பேர் பலியாகினர்.இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், முந்தைய அ.தி.மு.க. அரசு விசாரணை கமிஷனை அமைத்து உத்தரவிட்டது.
2018-ம் ஆண்டு ஜூன் 4-ந் தேதியன்று விசாரணை தொடங்கியது. இந்த விசாரணை கமிஷனின் பதவி காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. விசாரணை கமிஷனின் பதவி காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை அறிக்கையை வரும் மே மாதம் 22-ந் தேதிக்குள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் அளிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை பொதுத்துறை செயலாளர் டி.ஜெகநாதன் பிறப்பித்துள்ளார்.

Related Tags :
Next Story