காங்கிரஸ் கட்சியோடு பா.ஜ.க.வை ஒப்பிடுவதா? அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்
பா.ஜ.க., 3-வது பெரிய கட்சி என்று கூறுவதா? என்றும், காங்கிரஸ் கட்சியோடு பா.ஜ.க.வை ஒப்பிடுவதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
சென்னை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்கு கடுமையாக உழைத்த தி.மு.க. - காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உள்ளாட்சி தேர்தலில் 3-வது பெரிய கட்சியாக பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது என்று அடிப்படை ஆதாரமற்ற கருத்தை அண்ணாமலை கூறியிருக்கிறார். சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜ.க. 16 இடங்களில் போட்டியிட்டு 13 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைவிட பெரிய கட்சி என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்கமுடியாத வாதமாகும்.
மேலும், 2011-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு பெற்ற இடங்களை விட தற்போது 2022 தேர்தலில் 0.7 சதவீத இடங்களை மட்டுமே அதிகமாக பெற்ற பா.ஜ.க., 3-வது பெரிய கட்சி என்று கூறுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. அதுமட்டுமல்லாமல், நடைபெற்ற தேர்தலில் 10 மாவட்டங்களில் வெற்றிக்கணக்கையே தொடங்காத பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியோடு ஒப்பிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை.
நிறுத்திக்கொள்ள வேண்டும்
ஆனால், 2011-ல் தனித்து போட்டியிட்டபோது 2.07 சதவீத இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சி, தற்போது 2022 மாநகராட்சி தேர்தலில் 59.34 சதவீத இடங்களையும், நகராட்சி தேர்தலில் 4.4 சதவீதத்தில் இருந்து தற்போது 38.32 சதவீத இடங்களையும் கூடுதலாக பெற்று மகத்தான வெற்றியை ஈட்டியிருக்கிறது. எனவே, காங்கிரஸ் கட்சியோடு பா.ஜ.க.வை ஒப்பிடுவதை இனியாவது அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிகிற பா.ஜ.க. எதிர்ப்புகளை எந்த காலத்திலும் அவர்களால் எதிர்கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story