நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து
பல்வேறு மாவட்டங்களில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனால், சென்னை அண்ணா அறிவாலயம் நேற்று விழாக்கோலம் பூண்டது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியானது தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து நேற்று வாழ்த்து பெற்றனர். இதற்கான ஏற்பாடுகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் செய்யப்பட்டு இருந்தன.
மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து
இதையொட்டி, சென்னை மாநகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் நேற்று காலையில் தங்கள் பகுதி கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தனர். இதே போன்று சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களும் தங்கள் பகுதி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து இருந்தனர்.
இதனால், சென்னை அண்ணா அறிவாலயம் நேற்று விழாக்கோலம் பூண்டது. இதையடுத்து, காலை 11.30 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள் புத்தகம் உள்ளிட்ட பரிசு பொருட்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கியும், தங்களின் வெற்றிச் சான்றிதழ்களை அவரிடம் காண்பித்தும் வாழ்த்துகளை பெற்றனர். அதைத் தொடர்ந்து சேலம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வெற்றி வேட்பாளர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கே.எஸ்.அழகிரி சந்திப்பு
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கனிமொழி, தயாநிதி மாறன், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதே போன்று கூட்டணி கட்சியை சேர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா உள்ளிட்டோர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்கள் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர். மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகனும் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்தார்.
தொல்.திருமாவளவன், துரை வைகோ...
பின்னர், கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்திய மக்களை பிரித்தாள நினைக்கும் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. முற்றிலும் துடைத்து எறியப்பட்டுள்ளது. இந்த மகத்தான வெற்றிக்கு காரணம் எங்களது கொள்கை சார்ந்த கூட்டணி தான். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 9 மாத கால வெளிப்படையான ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் இது. எங்கள் தலைவர் ராகுல்காந்தி கூறியது போன்று பா.ஜ.க. மற்றும் அதனை ஆதரிப்பவர்களுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்பது இதன் மூலம் தெள்ளத்தெளிவாகி உள்ளது. எனவே தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
நேற்று மாலையில் கோவை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கரூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வெற்றி வேட்பாளர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும், கூட்டணி கட்சி தலைவர்களான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ம.தி.மு.க. தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ ஆகியோரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
இது தவிர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் இன்னும் ஓரிரு தினங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்.

Related Tags :
Next Story