2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்களை அழித்த போலீசார்


2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்களை அழித்த போலீசார்
x
தினத்தந்தி 24 Feb 2022 9:27 AM IST (Updated: 24 Feb 2022 9:30 AM IST)
t-max-icont-min-icon

மலை பகுதியில் பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்.

வேட்டவலம்,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச் சாராயம் உற்பத்தி செய்பவர்களுக்கு எதிராக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

இந்த வகையில்  வேட்டவலம் பகுதியில் சாராயம் உற்பத்தி செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சப்- இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன்  தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் சாராய ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அங்குள்ள மலைப்பகுதியில் போலீசார் சோதனை செய்து போது,  8 பிளாஸ்டிக் பேரல்களில் பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த சாராயங்களை கீழே கொட்டி அழித்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சாராயம் உற்பத்தி செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story