கோவையில் வலிமைப் படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு


கோவையில் வலிமைப் படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 24 Feb 2022 4:38 AM GMT (Updated: 24 Feb 2022 4:38 AM GMT)

கோவையில் வலிமை திரைப்படம் வெளியான பூ மார்க்கெட் அர்ச்சனா திரையரங்கின் முன்பு பெட்ரோல் குண்டு விசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

நடிகர் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.  தமிழகம் முழுவதும் 900 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 

 அதிகாலை முதலே பெரும்பாலான திரையரங்குகளின் முன் குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நடனமாடி ஆரவாரம் செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள கங்கா, யமுனா, காவேரி திரையரங்கின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

படம் பார்க்க ரசிகர்கள் குழுமியிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனம் ஒன்று மட்டும் லேசாக சேதமடைந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story