ராணிப்பேட்டை சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி


ராணிப்பேட்டை சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 24 Feb 2022 12:33 PM IST (Updated: 24 Feb 2022 12:33 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்போட்டை சூப்பிரண்டு அலுவலகத்தில் மகளுடன் வந்த பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பெண் ஒருவர் தனது மகளுடன் வந்தார். அப்போது திடீரென்று  தன் கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை திறந்து தீக்குளிக்க முயன்றார். 

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக பெண்ணிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து அவரை காப்பாற்றினர். 

இது தொடர்பாக போலீசார் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், சொத்து பிரச்சனை காரணமாக தீக்குளிக்க முயன்றது தெரியவந்துள்ளது.

இந்த குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில்,

ராணிப்பேட்டை புதிய அக்ராவரம் பகுதியைச் சேர்ந்த சரிதா(வயது27) என்பவர் சொத்து பிரச்சினை காரணமாக புகார் அளிக்க வந்ததாக தெரிவித்தார். தந்தையின் பூர்வீக சொத்தில் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை விற்று தருவதாக சரிதாவின் அக்கா கூறி உள்ளார். 

இதனை நம்பி சொத்ததை தனது அக்கா பெயருக்கு சரிதா மாற்றி கொடுத்து உள்ளார். அந்த இடத்தை அவர் ரூ.28 லட்சத்திற்கு விற்று உள்ளார்.  ஆனால் பணத்தை சரிதாவிடம் அவர் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த சரிதா தற்கொலைக்கு முயன்று உள்ளார் என்று தெரிவித்தார்.

Next Story