நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறாதது ஏன்? செல்லூர் ராஜு புது விளக்கம்
அதிமுகவின் வாக்கு வங்கி குறையவில்லை, வாக்களிக்க வேண்டியவர்கள் வாக்களிக்க வரவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை,
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கே.கே.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
இப்போது இருப்பவர்களை கட்சியை வழி நடத்தவே நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம். அதிமுக திமுகவில் சங்கமமாகிவிடும் என ஐ.பெரியசாமி கூறுவது ஏற்கத்தக்கதல்ல. அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து பேசி முடிவு எடுப்போம்.
அதிமுகவின் வாக்கு வங்கி குறையவில்லை; வாக்களிக்க வேண்டிய மக்கள் வாக்களிக்க வரவில்லை. தமிழகத்தில் என்றுமே திமுக, அதிமுக தான் ஆட்சி செய்யும். மாற்று கட்சியினர் யாராலும் ஆள முடியாது. பாஜக வளரும் கட்சி என்பதால் 3வது பெரியகட்சி என அண்ணாமலை சொல்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story