உக்ரைன் விவகாரம்: டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உதவி மையம் திறப்பு..!
உக்ரைன் விவகாரத்தில் உதவ தமிழக அரசு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உதவி மையம் திறந்துள்ளது.
சென்னை,
உக்ரைன் நாட்டிலிருந்து இந்தியா திரும்பும் தமிழக மாணவர்களுக்கு உதவ டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த உக்ரைன் விவகாரத்தில் மாநில ஒருங்கிணைப்பு அலுவலராக வெளிநாட்டு தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஜெசிந்தா லாசரஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உதவி தேவைப்படும் மாணவர்கள் 9289516716 என்ற தொலைபேசி எண்ணிற்கும் ukrainetamils@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story