நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 43 சதவீத வாக்குகள் பெற்று தி.மு.க. முதலிடம்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 43 சதவீத வாக்குகள் பெற்று தி.மு.க. முதலிடம்
x
தினத்தந்தி 25 Feb 2022 1:13 AM IST (Updated: 25 Feb 2022 1:13 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 42.99 சதவீத வாக்குகளையும், அ.தி.மு.க. 25.47 சதவீத ஓட்டுகளையும் பெற்று இருக்கிறது.

சென்னை,

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி தமிழகம் முழுவதும் நடந்தது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்று முடிந்தது.

இந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் எண்ணும் பணி கடந்த 22-ந்தேதி நடந்தது. தேர்தல் முடிவில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இந்த நிலையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் வாக்கு சதவீதத்தை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது.

மாநகராட்சி, நகராட்சியில் பெற்ற வாக்குகள்

அதன்படி, மாநகராட்சியை பொறுத்தவரையில் தி.மு.க. 43.59 சதவீதம், அ.தி.மு.க. 24 சதவீதம், சுயேச்சைகள் 8.48 சதவீதம், பா.ஜ.க. 7.17 சதவீதம், காங்கிரஸ் 3.16 சதவீதம், நாம் தமிழர் கட்சி 2.51 சதவீதம், மக்கள் நீதி மய்யம் 1.82 சதவீதம், பா.ம.க. 1.42 சதவீதம், அ.ம.மு.க. 1.38 சதவீதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 1.31 சதவீதம், தே.மு.தி.க. 0.95 சதவீதம், ம.தி.மு.க. 0.90 சதவீதம், இந்திய கம்யூனிஸ்டு 0.88 சதவீதம், விடுதலை சிறுத்தைகள் 0.72 சதவீதம் வாக்குகளை பெற்று இருக்கிறது.

நகராட்சியை எடுத்துக்கொண்டால், தி.மு.க. 43.49 சதவீதம், அ.தி.மு.க. 26.86 சதவீதம், சுயேச்சைகள் 14.25 சதவீதம், பா.ஜ.க. 3.31 சதவீதம், காங்கிரஸ் 3.04 சதவீதம், பா.ம.க. 1.64 சதவீதம், அ.ம.மு.க. 1.49 சதவீதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 0.82 சதவீதம், நாம் தமிழர் கட்சி 0.74 சதவீதம், ம.தி.மு.க. 0.69 சதவீதம், தே.மு.தி.க. 0.67 சதவீதம், வி.சி.க. 0.62 சதவீதம், இந்திய கம்யூனிஸ்டு 0.38 சதவீதம், மக்கள் நீதி மய்யம் 0.21 சதவீதம் வாக்குகளை மக்களிடம் பெற்று இருக்கின்றன.

தி.மு.க.வுக்கு 43 சதவீதம்

இதேபோல் பேரூராட்சிகளை பொறுத்தவரையில், தி.மு.க. 41.91 சதவீதம், அ.தி.மு.க. 25.56 சதவீதம், சுயேச்சைகள் 16.32 சதவீதம், பா.ஜ.க. 4.30 சதவீதம், காங்கிரஸ் 3.85 சதவீதம், பா.ம.க. 1.56 சதவீதம், அ.ம.மு.க. 1.35 சதவீதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 1.34 சதவீதம், நாம் தமிழர் கட்சி 0.80 சதவீதம், வி.சி.க. 0.61 சதவீதம், தே.மு.தி.க. 0.55 சதவீதம், இந்திய கம்யூனிஸ்டு 0.44 சதவீதம், ம.தி.மு.க. 0.36 சதவீதம், மக்கள் நீதி மய்யம் 0.07 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

அந்தவகையில் ஒட்டுமொத்தமாக கட்சிகள், சுயேச்சைகள் பெற்ற வாக்கு சதவீதத்தை பார்க்கையில், தி.மு.க. 42.99 சதவீதம் பெற்று முதலிடத்தை பெற்று்ள்ளது.

அ.தி.மு.க. 25.47 சதவீதம், சுயேச்சைகள் 13.01 சதவீதம், பா.ஜ.க. 4.92 சதவீதம், காங்கிரஸ் 3.35 சதவீதம், பா.ம.க. 1.54 சதவீதம், அ.ம.மு.க. 1.40 சதவீதம், நாம் தமிழர் கட்சி 1.35 சதவீதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 1.15 சதவீதம், தே.மு.தி.க. 0.72 சதவீதம், மக்கள் நீதி மய்யம் 0.70 சதவீதம், ம.தி.மு.க. 0.65 சதவீதம், வி.சி.க. 0.65 சதவீதம், இந்திய கம்யூனிஸ்டு 0.56 சதவீதம் வாக்குகளை பெற்று இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

Next Story