பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 4 தொழிலாளர்கள் பலி
கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உடல் கருகி பலியானார்கள்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 50). இவர் கோவில்பட்டி அருகே உள்ள துறையூர் கிராமத்தில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
நேற்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு ஆலையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். மதியம் 2 மணி அளவில் ஆலையில் உள்ள ஒரு அறையில் பேன்சி ரகவெடிகள் தயாரிக்கும் பணியில் 2 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
வெடித்து சிதறியது
அந்த சமயத்தில் வெடி குழாய்களில் அடைக்கும் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினிய பவுடர், காப்பர் கலவையை இரண்டு வாளிகளில் மேலும் 2 தொழிலாளர்கள் தூக்கிக்கொண்டு அந்த அறைக்கு வந்தனர்.
அப்போது, அவர்களில் ஒரு தொழிலாளி எதிர்பாராதவிதமாக வாளியுடன் கீழே விழுந்தார். இதில் கீழே விழுந்த மருந்து உராய்வு ஏற்பட்டதில் அந்த அறையில் குபீரென்று தீப்பிடித்தது. மேலும் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் அந்த அறையின் கட்டிடம் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. இதனால் பட்டாசு ஆலையில் மற்ற பகுதிகளில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஓடினார்கள்.
4 பேர் பலி
இந்த கோர விபத்தில் அங்கு பணியில் இருந்த கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் வி.பி.சித்தன் நகரைச் சேர்ந்த கண்ணன் என்ற மாடமுத்து(50), தொட்டம்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ்(52), ஈராச்சியைச் சேர்ந்த ராமர்(59), குமாரபுரத்தை சேர்ந்த தங்கவேல்(43) ஆகிய 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்து குறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story